TY - BOOK AU - “யூமா வாசுகி TI - பதினான்காவது அறை: (ஆல்பிரட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள்) SN - 978812342752 U1 - 894.8113 VAS PY - 2014/// CY - சென்னை PB - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் N1 - Biblio N2 - பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர். ‘ரத்த உறவு' நாவலில், குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரிடும் வன்முறை குறித்த வாழ்க்கைப் பதிவுகளைப் பகிர்ந்திருப்பார். `மஞ்சள் வெயில்' நாவலில், ஓர் உறவின் பிரிவு வலியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்கொண்டு, மிக மென்மையாக தன்னை நேசித்தவருக்கு விடை தரும் ஒருவரின் மனப் பதிவுகளை நேர்த்தியுடன் படைத்திருப்பார். யூமா வாசுகியின் படைப்புகளில், குழந்தைகள் தாங்கள் வளரும் வீட்டில் புழங்குவதைப்போல இயல்பாக உலவுவார்கள். குழந்தைகள்மீது அளப்பரிய நேசம்கொண்ட இவர், குழந்தைகள் குறித்து எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. அவரது கவிதை ஒன்றில், `ஏதொரு குழந்தையும் எங்கோ கனவில் துடித்தழுதால் எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே' என்று எழுதியிருப்பார். ER -