சண்முகசுந்தரம், செ.

தை எழுச்சி : குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும் / செ. சண்முகசுந்தரம், இர. இரா. தமிழ்க்கனல் மற்றும் யமுனா ராஜேந்திரன் - 1st ed., - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட்., 2017 - x, 444 p. 22 cm

தமிழக வெகுமக்கள் உணர்வின் வரைபடத்தை ‘தை எழுச்சி’ எனும் மகத்தான நிகழ்வு என்றென்றும் மாற்றி அமைத்துவிட்டிருக்கிறது. ஐம்பது இலட்சம் மக்கள் தமிழகத்தின் பொதுவிடங்களில் திரண்ட இந்த எழுச்சியின் ஊற்றுக்கண் எது? மரபான அரசியல் கட்சிகளின் தலைமைகளை நிராகரித்து இத்தகையதொரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி எவ்வாறு சாத்தியமானது? இதன் பின்னிருந்த வெகுமக்கள் உளவியல் எத்தகையது? இது கட்டவிழ்த்துவிட்ட மானுட விழுமியங்களின் பெறுபேறு யாது? மத-சாதிய-பால் பேதங்கள் மலிந்த ஒரு சமூகத்தில் இத்தகைய ஒற்றுமை எதனால் சாத்தியமானது? இதனது படிப்பினைகள் என்னென்ன? இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை அதனது பல்வேறு பார்வைகளுடன், முரண்களுடன், கேள்விகளுடன் ஆவணப்படுத்தும் முயற்சி இது. ஒருவகையில் தை எழுச்சியின் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி இது. வருங்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் எமது பண்பாட்டின் முதுசம் இவ்வாறுதான் அவர்களிடம் கையளிக்கப்பட முடியும்.

9788123436661


கட்டுரை
தமிழக அரசியல்

894.8114 / SHA