சமூகம் - வலைத்தளம் - பெண் /
சமூகம் வலைத்தளம் பெண் Samoogam Valaithalam Pen
தி. பரமேஸ்வரி
- 1ம் பதிப்பு
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் ., 2019
- xviii, 220 p. 21 cm.
தமிழ்க் கட்டுரைகள்.
சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.