பசுமைக்குமார்

நட்பை வலுப்படுத்துவது எப்படி? பசுமைக்குமார் - சென்னை தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 2018 - VIII,71p. 22cm.

'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவாகவும் நட்பு அமைந்துள்ளது என்கிறார் நூலாசிரியர் பசுமைக்குமார்.இந்த நட்புறவு என்பது 'பகை தடுக்கும்சக்தி' என்றும் 'உயிர் காக்கும் மருந்து' என்றும் வலியுறுத்துகிறார்.நண்பர் என்பவர் வெறும் பார்வையாளராக இருந்துவிடக் கூடாது என்றும், ஒருவர் தவறு செய்யும்போது, அவைத் திருத்த வேண்டிய பொறுப்பும் நண்பருக்கு உண்டு என்றும் உணர்த்துகிறது. பொய் நட்பு எப்படிப்பட்டது, தீ நட்பு எப்படிப்பட்டது என்பதையும் இந்நூல் சுட்டிகாட்டுகிறது.இந்த நூல் மாணவர்கள், ஆசிரிய்கள், பெற்றோர் மற்றும் அலுவலர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

9789380892986


நட்பு
சுய முன்னேற்றம்

158.1 / PAS