சொக்கலிங்கம், வீ

தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி உரையாசிரியர் வீ. சொக்கலிங்கம் - 2. பதிப்பு - தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் 1992 - ix,50 p. ; 21 cm.

குறவஞ்சி இலக்கியம் பாட்டுடைத் தலைவனைப் பாடுபொருளாக கொண்டது. குறவஞ்சியைக் குறம் + வஞ்சி எனப் பிரித்து குறவன் குறத்தி வாழ்வியலைச் சித்தரிப்பதாகும். ஒரு தலைவன், தலைவியோடு வாழ்கிறான். அவர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. பிள்ளையில்லாத காரணத்தினால் தலைவன் மறுமணம் புரிந்துகொண்டு இளையாடுடன் வாழ்கின்றான். மூத்தாளை மாமி முதலானோர் நிந்திக்கின்றனர். இவ்வித இன்னல்களுடன் வாழும் தலைவிக்கு குறத்தி குறி சொல்லுகிறாள். தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் அருளினால் பிரிந்த கணவன் மீண்டும் வரப்பெற்று மக்களைப் பெறுவாய் என்றும் நிந்தித்தவர்கள் வாயடைக்கும்படியாக வாழ்வாய் என்றும் சொல்கிறாள். காலம் கிபி 1633 1673. இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை


குறவஞ்சி
சிற்றிலக்கியம்
தமிழ் இலக்கியம்

894.81112E05 CHO