Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library 2ND FLOOR, B WING | 894.811301 TAM (Browse shelf(Opens below)) | Available | 622782 |
No cover image available | No cover image available | No cover image available | No cover image available | No cover image available | ||||
894.811301 TAM மரணவலையில் சிக்கிய மான்கள் | 894.811301 TAM மரணவலையில் சிக்கிய மான்கள் | 894.811301 TAM மரணவலையில் சிக்கிய மான்கள் | 894.811301 TAM தமிழ்செல்வன் கதைகள் | 894.811301 TAM சிரிக்க சிந்திக்க தெனாலிராமன் கதைகள் | 894.811301 TAM சிரிக்கவும், சிந்திக்கவும் முல்லா கதைகள் | 894.811301 TAM நல்வழி காட்டும்நன்னெறிக் கதைகள் 60 |
தமிழின் முக்கியமான சிறுகதையாளர். பண்பாட்டுப் போராளி.மிகச் சிறந்த கட்டுரையாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போது அவ்வமைப்பின் மாநிலத் தலைவர். அறிவொளி இயக்கத்தில் நீண்ட காலம் பங்களிப்பைச் செலுத்தியவர். மாற்றுக் கல்விக்கான பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ச்சியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதிலும், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதிலும், எழுதுவதிலும் இடம் வகிப்பவர்.
தமிழ்ச்செல்வன் படைப்புகளின் பலம் என்று அவருடைய மொழி நடையையும் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் பாங்கையும் குறிப்பிடலாம். நுட்பமும் அழகும் எளிமையும் கூட்டிய மொழி லாவகம் கைவரப் பெற்றவர். இடையிடையே தெறிக்கும் அங்கதம் இடைச் செருகலாக இல்லாமல் தேவையானதெனத் தீர்மானித்தே அதை வாசகன் அனுபவித்துக் கடந்து செல்லமுடியும்.
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் வறுமை உருவாக்கும் கோரச் சித்திரத்தை சிறிதளவும் மிகையற்ற வகையில் வரைந்து வாசிப்பவரின் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைக்கிறார். தூய அன்பின் மகத்துவம் உதாசீனப் படுத்தப்படுகையில் எழும்பும் சோகலயங்களை இசைக்கலைஞனைப் போல இவர்தன் கதைகளில் இசைக்கும் பாங்கு அலாதியானது. பெண்களின் அக உலகத்தை நுட்பமாக அவதானித்தவராக தமிழ்ச்செல்வன் பலகதைகளில் வெளிப்படுகிறார். ஆண்,பெண் உறவின் சிக்கல்களை இத்தனை நெருக்கமாக அலசிப் பார்த்தவர்கள் தமிழில் குறைவு. குழந்தைகளின் மெல்லிய மனவோட்டங்களும், ஆசைகளும் ஏமாற்றங்களும் தமிழ்ச்செல்வனின் எழுத்தின் வழியே துல்லியமான சித்தரிப்பைப் பெறுகின்றன.
எதை எழுதினாலும் அதுவாக மாறிவிடும் தன்மை நல்ல கலையின் கலைஞனின் அடையாளம். அந்த பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்.
There are no comments on this title.