Image from Google Jackets

திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு பொன். சுப்பிரமணிய நாவலர் ; உரையாசிரியர் ப. வெ. நாகராசன்

By: Contributor(s): Publication details: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் 1992Edition: 1 பதிப்புDescription: 204 p. ; 21 cmSubject(s): DDC classification:
  • 894.81112C04 NAG
Item type: Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)

இப்பள்ளு திருநெல்வேலி சங்கரன்கோவில் புளியங்குடிக்கு அருகில் உள்ள திருவேட்டை நல்லூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அய்யனாரைப் பாட்டுடைத் தலைவனாக போற்றி பாடப்பட்டதாகும். காலம் 1882 தஞ்சை சரஸ்வதிமகால் ஏட்டுச்சுவடி 1865 மூத்தப் பள்ளி உள்ளூரைச் சேர்ந்தவள். இளைய பள்ளி குற்றாலம் நன்னகர் பகுதியை சேர்ந்தவள். பள்ளன் எப்‍போதும் இளையப் பள்ளியுடனே இருப்பான். பண்ணை வேலைகளையும் ஒழுங்காக கவனிப்பது கிடையாது என்று மூத்தப்பள்ளி பண்ணைக்காரனிடம் முறையிட அவனும் பள்ளனை விசாரிக்கின்றான். பண்ணைக்காரன் வயலில் கிடை போடுவதற்கு ஆயர்களை அழைத்து வருமாறு பள்ளனிடம் கூறுகின்றான். பட்டித் தலைவனை ஆடுகளோடு கூட்டி வந்து விட்டுவிட்டு பள்ளன் இளைய பள்ளியோடு வீட்டிற்கு சென்று விடுகின்றான். மூத்தவள் மீண்டும் பண்ணைக்காரனிடம் சென்று முறையிடுகிறாள். வயலில் உரம் வைத்தாக பொய்சொல்லிக்கொண்டு வரும் பள்ளனை பண்ணைக்காரன் குட்டையில் போட்டு விடுகின்றான். இதைப் பார்த்த இளைய பள்ளி செய்வதறியாது திகைத்து போகிறாள். பண்ணைக்காரனிடம் சொல்லி தன்னை விடுவிக்குமாறு மூத்தப் பள்ளியிடம் பள்ளன் கேட்கிறான். அவளும் அவ்வாறே செய்கின்றாள். பின்னர் பள்ளன் ஒழுங்காக பண்ணைவேலை செய்கின்றான். அப்போது ஒரு காளைமாடு பள்ளைனை முட்டிவிட அவன் மயங்கி வீழ்கிறான். பள்ளியர் இருவரும் புலம்புகின்றனர். பின்னர் மயக்கம் ‍தெளிந்த பள்ளன் பண்ணை வேலைகளை கவனிக்கின்றான். நன்கு விளைந்தவுடன் அறுவடைக்கு பின்னர் பண்ணைக்காரன் ஆணைக்கிணங்க விளைந்த நெல்லை பாகம் பிரிக்கின்றனர். அப்போது தனக்கு சேரவேண்டிய நெல்லைக் குறைவாக பள்ளன் அளந்துவிட்டான் என்று மூத்தவள் முறையிடுகிறாள். இளைய பள்ளியும் எதிர்த்து பேசுகிறாள். சிறிது நேரத்தில் அவர்களே மனம் மாறி ஒற்றுமையாக வாழ முடிவெடுக்கின்றனர்.

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha