நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?
பெரியார் ஈ. வெ. ராமசாமி
- 2. பதிப்பு
- சென்னை பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட் 2018
- various paging ill. 25 cm.
Vol. 1. மொழி: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள் Vol. 2. கலையும் பண்பாடும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள் Vol. 3. இலக்கியம்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள் Vol. 4. தத்சொற்சித்திரமும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள் Vol. 5. கட்டுரைகளும் உரையாடல்களும்: 1925-1973 வரைக்குமான தந்தை பெரியாரின் பதிவுகள்
Includes index
1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் ‘கலையும் பண்பாடும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
தத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக் கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக ‘தத்துவம்- சொற்சித்திரம்’ என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக ‘சித்திரபுத்திரன் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
9788123433653
மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும். தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும்.