கோட்பாட்டியல் நோக்கில் சிலப்பதிகாரம்
அ. அறிவுநம்பி
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் 2017
- xviii, 70 p.
கோட்பாட்டியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற இந்நூல் பல புதிய செய்திகளைத் தாங்கி வந்துள்ளது. நோக்கரிய நோக்கும், நுணுக்கரிய நுண்ணுணர்வும் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இந்நூல், கற்போர்க்கு இனிமை பயக்கவல்லது. ஒரு நூலை முழுதுறவும், பழுதறவும் கற்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டினைக் காட்டுவதாக விளங்குகிறது இந்நூல். ஆய்வுலகில் புதிய புதிய வாயிலகளைத் திறந்துவைத்தால், அவற்றின் வழியே மேலும் பல புத்தாராய்ச்சிகளுக்குள் புக முடியும் என்பதற்கு இந்நூல் தக்கதோர் எடுத்துக்காட்டு. நூலாசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி சிலம்பு குறித்த சிந்தனையில் தாம் நுணுகிக் கண்டவற்றை ஆய்வறம் வழுவாமல் சில புதிய வாயில்களைத் திறந்துவைத்துள்ளார். - இராம. குருநாதன்