நந்திக் கலம்பகம் : மூலமும் உரையும்

அய்யாசாமி, ம

நந்திக் கலம்பகம் : மூலமும் உரையும் புலவர் ம. அய்யாசாமி - 1. பதிப்பு - சென்னை திலகம் பதிப்பகம் 2006 - 135 p.

நந்திக் கலம்பகத்தை இயற்றிய ஆசிரியரின் பெயர் ஊர் கண்டறியப்படவில்லை. காலம் கிபி 847 முதல் கிபி 872 வரை. நந்தி மன்னனின் சகோதரர்கள் அவனை வெல்வதற்குப் பலவிதமான சூழ்ச்சிகள் செய்தும் அது முடியாமல் போகவே அவருள் ஒருவன், தான் நந்தியின் மேல் நச்செழுத்தும் தீமையும் அமையப் பாடல்பாடி அவனை அழிப்பதாக எண்ணி, நந்திக் கலம்பகத்தை இயற்றினான். அதனை அறிந்த மந்திரிகள் அந்நூலைக் கேட்கலாகாதென்று நந்திக்கு அறிவுறுத்தி வைத்தனர். ஒருநாள் நந்தி மன்னன் அரசவையில் இருக்கும் போது, அவன் தம்பி பக்கத்துச் சுவரில் துளை ஒன்றை ஏற்படுத்தி ஒரு புலவரை ஏற்பாடு செய்து அந்த துளை வழியே மன்னன் காதில் கேட்கும்படி இக்கலம்பகத்தின் ஒரு பாடலைச் பாடச்செய்தான். அதில் மன்னன் மயங்கினான். ஒருநாள் நகர்வலம் வரும்போது தாசி ஒருத்தி இக்கலம்பக பாடல் ஒன்றை வீணையில் இசைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் மன்னன் நந்தி அவளை அழைத்து விசாரித்ததில் இப்பாடல் தன் தம்பியினால் பாடப்பட்டது என்றறிந்தான். பின்னர், தான் இறந்தாலும் பரவில்லை அந்த பாடல்களை முழுவதும் கேட்டு இறந்து போகலாம் என்று முடிவு செய்து அவன் தம்பியை வரவழைத்து முழுபாடல்களை கேட்டு மாண்டு போனான்


சிற்றிலக்கியம்
நந்திக் கலம்பகம்

894.8111228 IYY

Find us on the map

Powered by Koha